மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பாரதிவித்யாலயா மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை

கோபி கல்வி மாவட்ட பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டி பள்ளி கல்வித் துறையினரால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கோபி பாரதி விதயாலௌஆ பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு இறகுப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையருக்கான அனைத்துப் பிரிவுகளிலும் B௧4,17,19 வெற்றி பெற்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளனர். வெற்றி பெற்ற இம்மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு.பி.ஆர்.வேலுமணி அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.