அந்தமானில் யோகாசன போட்டிக்கு பாரதி வித்யாலயா மாணவர்கள் தேர்வு

மாநிலங்களுக்கு இடையிலான 2-வது யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று ஈங்கூரில் நடைபெற்றது. பல்வேறு மாணவ மாணவைகள் இதில் பங்கேற்றனர். பாரதி விதயாலயா சிபிஎஸ் -ல் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவி K,S.பிரியமாலா மற்றும் 11ம் வகுப்பு மாணவன் P.நிதேஷ் "சாம்பியன்களின் சாம்பியன்" பட்டத்தினையும், G.T.K ஹரிபிரணவ் 3ம் வகுப்பு மாணவன் முதல் இடத்தை பிடித்து "யோகா நட்சத்திர" விருதையும் வென்றனர். மேலும் வருகிற ஜனவரியில் அந்தமானில் நடைபெறவுள்ள் யோகாசன போட்டியில் பங்குபெறும் வாய்ப்பினையும் இம்மூன்று மாணவர்களும் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் பி.ஆர்.வேலுமணி அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.